தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கட்டப்பஞ்சாயத்து செய்யும் திமுகவினர்.. முன்னாள் அமைச்சர் ஓ. எஸ்.மணியன் விமர்சனம்.. - முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் விமர்சனம்

பொய்யான வாக்குறுதிகளைக் கூறி, ஆட்சிக்கு வந்த திமுகவினர் கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 17, 2022, 12:34 PM IST

மயிலாடுதுறை: தனியார் திருமண மண்டபத்தில் முன்னாள் பூம்புகார் எம்எல்ஏ எஸ்.பவுன்ராஜ் தலைமையில் நேற்று (ஆக.16) நடந்த நகர அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், 'எடப்பாடியாரை 99.5% அதிமுகவினர் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்தனர். தற்போது கழகத்தினர் எழுச்சியுடன் நடை போட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால், பொய் வாக்குறுதிகளைக் கூறி ஆட்சிக்கு வந்த திமுகவினர் கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

திமுகவினர் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாகக் குற்றச்சாட்டு

சமீபத்தில் திருச்சி அருகே ஒரு திமுக கவுன்சிலரின் கணவன் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டதற்காக 3 பேரை சாலையில் ஓட ஓட விட்டு விரட்டியதை சமூக வலைதளங்களில் கண்டோம். அதுமட்டுமன்றி கஞ்சா விற்பனை அதிகரித்து சிறுவர்கள் சீரழிந்து வருகிறார்கள் என்று குற்றம் சாட்டினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏக்கள் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: கனல் கண்ணனுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி தொண்டர்கள் கைது

ABOUT THE AUTHOR

...view details