தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முன்னாள் ஊர் காவல் படை பெண் காவலர் தர்ணா போராட்டம் - மயிலாடுதுறை மாவட்ட செய்திகள்

மயிலாடுதுறை: பாலியல் தொந்தரவு செய்யும் நபர்களை கைது செய்யக் கோரி முன்னாள் ஊர் காவல் படை பெண் காவலர் சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரே சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

பெண் காவலர் தர்ணா போராட்டம்
பெண் காவலர் தர்ணா போராட்டம்

By

Published : Nov 9, 2020, 4:04 PM IST

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்தவர் முன்னாள் ஊர் காவல் படை பெண் காவலர் திவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த சேகர், செல்வமணி, முருகானந்தம், பிரபாகரன் ஆகியோர் பாலியல் தொந்தரவு செய்துள்ளனர்.

இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திவ்யா கொள்ளிடம் காவல் நிலைய ஆய்வாளர் வனிதாவிடம் புகார் கொடுத்துள்ளார். ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.

எனவே இன்று (நவ.9) திவ்யா சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரே சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல் துறையினர் திவ்யாவை விசாரணைக்காக அங்கிருந்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

முன்னாள் ஊர்காவல் படை பெண் காவலர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: குடும்பத்தைக் கடத்தியதாகக் காவலர் மீது புகார் - கணவர் தர்ணா போராட்டம்!

ABOUT THE AUTHOR

...view details