தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அறிஞர் அண்ணா நினைவு தினம்: மரியாதை செய்த அரசியல் பிரமுகர்கள் - அறிஞர் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு மரியாதை செய்த அரசியல் பிரமுகர்கள்

நாகப்பட்டினம்: அறிஞர் அண்ணாவின் 51ஆவது நினைவு தினத்தையொட்டி,  பரிமளரெங்கநாதர் ஆலயத்தில் சமபந்தி விருந்து அளிக்கப்பட்டது.

former chief minister anna Memorial Day honored
former chief minister anna Memorial Day honored

By

Published : Feb 4, 2020, 9:04 AM IST

அறிஞர் அண்ணாவின் 51ஆவது நினைவு தினத்தையொட்டி அரசு உத்தரவுப்படி சமபந்தி போஜனம் எனப்படும் சமபந்தி விருந்து பல்வேறு ஆலயங்களில் நடைபெற்றது. நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை திருந்தளுரில் உள்ள பரிமளரெங்கநாதர் ஆலயத்தில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் சட்டப்பேரவை உறுப்பினர் வி. ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதையடுத்து பர்கூர் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் ராஜேந்திரன், பேரறிஞர் அண்ணாவின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சமபந்தி விருந்து

அதேபோல், பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி பர்கூர் ஒன்றிய அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியானது, ஒன்றியச் செயலாளர் ஜெயபாலன் தலைமையில் நடைபெற்றது. அப்போது கிருஷ்ணகிரி நகர அதிமுக செயலாளர் கேசவன், ராசுவிதியில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மரியாதை செய்த அரசியல் பிரமுகர்கள்

இதையும் படிங்க: மதுரையில் கருணாநிதிக்கு சிலை வைக்கக் கோரிய வழக்கு: 8 வாரங்களில் முடிவெடுக்க உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details