தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'5 லட்சத்து 40 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது' - அமைச்சர் காமராஜ் - உணவுத்துறை அமைச்சர் காமராஜ் செய்தியாளர் சந்திப்பு

நாகை: விவசாயிகளிடமிருந்து இதுவரை 5 லட்சத்து 40 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, 1,021 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்

Food minister Kamaraj
Food minister Kamaraj

By

Published : Feb 13, 2020, 10:13 AM IST

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகேயுள்ள ஆக்கூர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம், நாகையை அடுத்த கீழ்வேளூர் நெல் கொள்முதல் நிலையம் ஆகியவற்றை தமிழ்நாடு உணவுத் துறை அமைச்சர் காமராஜ், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய உணவுத் துறை அமைச்சர் காமராஜ், "நடப்பு ஆண்டு சம்பா அறுவடை நெல் பயிர்களைக் கொள்முதல் செய்ய தமிழ்நாட்டில் 1,655 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதில் காவிரி டெல்டா மாவட்டத்தில் மட்டும் 1,345 இடங்களிலிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டுவருகிறது.

தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் ஆய்வுசெய்ய 12 குழுக்கள் அமைக்கப்ட்டு திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுவரை 5 லட்சத்து 40 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, 1,021 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

விவசாயிகளிடமிருந்து புகார்கள் வந்தால் சம்பந்தப்பட்ட கொள்முதல் நிலைய ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் புகாரளிக்க 04426424560 - 2642244 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் காவிரிப் படுகை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதலமைச்சர் அறிவித்திருப்பது விவசாயிகளிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்களை அனுமதிக்க மாட்டோம் என்றார். அதே கொள்கையில்தான் நாங்களும் இருக்கிறோம். ஆனால் சிலர் எதாவது பிரச்னையைக் கிளப்ப வேண்டுமென்று போராட்டங்கள் நடத்தியபோது சட்டஒழுங்குப் பிரச்னைக்காக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ன. போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறுவது குறித்து முதலமைச்சர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பார்" என்றார்.

அமைச்சர் காமராஜ் செய்தியாளர் சந்திப்பு

இந்த ஆய்வின்போது மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் ராதாகிருஷ்ணன், சீர்காழி சட்டப்பேரவை உறுப்பினர் பாரதி, நுகர்ப்பொருள் வாணிபக் கழகச் செயலர் தயானந்த் கட்டாரி, பொதுமேலாளர் சுதாதேவி, நாகை மாவட்ட ஆட்சியர் பிரவின் பி நாயர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: காமராஜர் பல்கலைக்கழக விடைத்தாள்கள் காணாமல் போன விவகாரம்: 6 பேர் இடமாற்றம்

ABOUT THE AUTHOR

...view details