தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தெலங்கானாவிலிருந்து 2 ஆயிரத்து 500 டன் புழுங்கல் அரிசி வரவு

மயிலாடுதுறை: தெலங்கானாவிலிருந்து 2 ஆயிரத்து 500டன் புழுங்கல் அரிசி சரக்கு ரயில் மூலம் மயிலாடுதுறைக்கு வந்திறங்கியது.

தெலங்கானாவிலிருந்து 2 ஆயிரத்து 500 டன் புழுங்கல் அரிசி வரவு
தெலங்கானாவிலிருந்து 2 ஆயிரத்து 500 டன் புழுங்கல் அரிசி வரவு

By

Published : Jan 3, 2021, 2:28 PM IST

ஒவ்வொரு மாநிலத்திற்கும் குறிப்பிட்ட அளவு அரிசியை குறைந்தவிலையில் மத்திய அரசு வழங்கிவருகிறது. மத்திய தொகுப்பிலிருந்து வழங்கப்படும் அரிசி மத்திய அரசு நிறுவனமான இந்திய உணவுக்கழகம் மூலம் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அந்த அரிசி தான் மாநிலத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக்கடைகள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.

தெலங்கானா மாநிலம் மிரியலகுடா ஊரில் உள்ள இந்திய உணவுக்கழகமானது தமிழ்நாட்டிற்கான மத்திய தொகுப்பு அரிசியில் 2500 டன் புழுங்கல் அரிசியை 41 சரக்குப் பெட்டிகளில் ரயில் மூலம் மயிலாடுதுறைக்கு அனுப்பி வைத்தது. மயிலாடுதுறைக்கு வந்த அரிசியை, மயிலாடுதுறை சித்தர்காடு பகுதியில் உள்ள இந்திய உணவுக்கழக கிடங்கு அலுவலர்கள் சென்று பார்வையிட்டு 150 லாரிகள் மூலம் அவற்றை ஏற்றி சித்தர்காடு இந்திய உணவுக்கழக கிடங்கிற்கு அனுப்பி இருப்பு வைத்தனர்.

தெலங்கானாவிலிருந்து 2 ஆயிரத்து 500 டன் புழுங்கல் அரிசி வரவு

அங்கிருந்து மாநில அரசின் நிறுவனமாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தினர் வாங்கிச்சென்று மயிலாடுதுறை, குத்தாலம், சீர்காழி மற்றும் தரங்கம்பாடி ஆகிய தாலுக்காக்களில் உள்ள ரேஷன் கடைகளுக்கு பொதுவிநியோகத் திட்டத்தின்கீழ் வழங்குவதற்கு எடுத்துச்செல்வார்கள். அரிசி இறங்குவதை இந்திய உணவுக்கழக அலுவலர்கள் ரயில் நிலையத்திற்குச் சென்று கண்காணித்தனர்.

இதையும் படிங்க:விவசாயிகளின் வாழ்வாதாரத்தோடு கண்ணாமூச்சி ஆடும் செய்யூர் அனல்மின் நிலைய திட்டம்...!

ABOUT THE AUTHOR

...view details