தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாட்டுப்புற கலைஞர்கள் நடத்திய கரோனா விழிப்புணர்வு! - நாகப்பட்டினத்தில் நாட்டுப்புற கலைஞர்கள் நடத்திய கரோனா விழிப்புணர்வு

நாகப்பட்டினம்: மயிலாடுதுறையில் நாட்டுப்புற கலைஞர்கள் கரோனா வைரஸ் பாதுகாத்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.

கரோனா விழிப்புணர்வு நடத்திய நாட்டுப்புற கலைஞர்கள்
கரோனா விழிப்புணர்வு நடத்திய நாட்டுப்புற கலைஞர்கள்

By

Published : Apr 12, 2020, 9:50 AM IST

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் கரோனா வைரஸ் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வருவாய் துறை சார்பில் நாட்டுப்புற கலைஞர்கள் நடத்திய வீதி நாடகம் பொதுமக்களின் பெரும் வரவேற்பை பெற்றது.

கலைத்தாய் அறக்கட்டளை நிறுவனர் கிங்பைசல் தலைமையில் நாட்டுப்புற கலைஞர்கள் சிவன், அகத்தியர், எமன் உள்ளிட்ட வேடமணிந்து நிகழ்த்திய விழிப்புணர்வு வீதி நாடகத்தை மயிலாடுதுறை வட்டாட்சியர் முருகானந்தம் தொடங்கிவைத்தார்.

பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவை மதித்து நடக்க வேண்டிய அவசியம் குறித்தும், அநாவசியமாக வீதிகளில் நடமாடக் கூடாது, வீட்டிற்கு சென்றவுடன் சோப்பு போட்டு கை கழுவுவது, தனிமைப்படுத்திக்கொள்ளுதல் குறித்து நாடகமாக நடித்தனர்.

மேலும், சாலையில் முகக்கவசம் அணியாமல் சென்றவர்கள் மீது எமன் பாசக்கயிறை வீசுவது போலவும், அகத்தியரின் வேண்டுகோளுக்கிணங்க சிவபெருமான் அவர்களை காப்பாற்றி முகக்கவசம் அணிவதன் அவசியத்தை விளக்குவது போலவும் நடித்து காண்பித்தனர்.

கரோனா வைரஸால் மக்களை சந்திக்காமல் ஆலயங்கள் மூடப்பட்டு சிவனே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாகவும், மக்களை காப்பாற்றுவதற்காக அரசு அலுவலர்கள், காவல் துறையினர், சுகாதாரத் துறையினர் எடுக்கும் நடவடிக்கைகளை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.

கரோனா விழிப்புணர்வு நடத்திய நாட்டுப்புற கலைஞர்கள்

நாட்டுப்புற கலைஞர்கள் மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் செயல்படும் காய்கறிக் கடைகள், மணிக்கூண்டு, காவல் நிலையம் உள்ளிட்ட பல்வேறு வீதிகளின் கரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு நாடகம் நடத்தினர்.

இதையும் படிங்க: திருச்சியில் வரையப்பட்ட கரோனா விழிப்புணர்வு ஓவியம்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details