தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடியிருப்பு பகுதியை சூழ்ந்த வெள்ளநீர்!

நாகப்பட்டினம்: மயிலாடுதுறை அருகே ஆனந்ததாண்டவபுரத்தில் வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் ராதாநல்லூர், ஆற்காடு குடியிருப்பு பகுதியில் 200க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளநீரால் சூழ்ந்துள்ளது.

Floodwaters entering the house
Floodwaters entering the house

By

Published : Dec 4, 2020, 8:23 PM IST

மயிலாடுதுறை மாவட்டத்தில் புரெவி புயல் கனமழையால் ஆறுகள், வாய்க்கால்களில் அதிக அளவில் மழை வெள்ளநீர் கரைபுரண்டு ஓடுகிறது. இந்நிலையில், ஆனந்ததாண்டவபுரம் ஊராட்சி ராதாநல்லூர் கிராமத்தில் ஆத்துக்குடி, கொண்டத்தூர் வாய்க்கால்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் ராதாநல்லூரில் வடக்குத்தெரு, தெற்குத்தெரு, ஆற்காடு கிராமத்திலுள்ள 200க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதில் 20க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்ததால் மூன்று வீடுகள் பகுதியாக இடிந்து விழுந்துள்ளது. 1000 ஏக்கருக்கு மேல் சம்பா பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இந்த பாதிப்பு காரணமாக கிராம மக்கள் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

குடியிருப்பு பகுதியில் புகுந்த வெள்ளநீர்

இந்நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு சென்ற ஒன்றிய அலுவலர்களிடம், தங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: புரெவி புயல் தாக்கம்: கரைதட்டிய படகுகள்!

ABOUT THE AUTHOR

...view details