மயிலாடுதுறை: காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ள நீர் முழுவதுமாக மேட்டூர் அணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. தற்பொழுது மாலை 1.75 லட்சம் கன அடி வரை வெள்ளநீர் வெளியேற்றப்பட்டு வருவதாகத்தெரிகிறது.
கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்படும் வெள்ள நீரானது மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஆற்றின் வழியே சென்று பழையாறு அருகே கடலில் கலந்து வருகிறது. இதன் காரணமாக கொள்ளிடம் ஆற்றின் உள்ளே அமைந்துள்ள திட்டுக்கிராமங்களான நாதல்படுகை, முதலைமேடு திட்டு, வெள்ளைமணல், கோரை திட்டு உள்ளிட்ட கிராமங்களில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக வெள்ள அபாய எச்சரிக்கை வழங்கப்பட்டு வருகிறது.