மயிலாடுதுறை: தரங்கம்பாடியில் மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கடந்த 2019ஆம் ஆண்டு அதிமுக அரசால் ரூ.120 கோடி நிதி ஒதுக்கப்பட்டு மீன்பிடித் துறைமுகத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தது.
மீனவர்கள் படகுகளைப் பாதுகாப்பாக நிறுத்தி வைப்பதற்காக 1070 மீட்டர் தூரம், 20 அடி உயரம், 15 அடி அகலத்தில் தூண்டில் வளைவு அமைக்கப்பட்டு 90 சதவீதப் பணிகள் நிறைவடைந்துள்ளன. கடந்த 2020இல் அம்பன் புயலின்போது தூண்டில் வளைவுக்காக கட்டப்பட்டிருந்த கருங்கல் தடுப்பு சுவரின் ஒரு பகுதி சேதம் அடைந்தது.
மேலும் கூடுதலாக 70 கோடி நிதி ரூபாய் ஒதுக்கப்பட்டு 190 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் நேற்று கரையைக் கடந்த மாண்டஸ் புயல் காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக தூண்டில் வளைவு சேதமடைந்தது. கருங்கற்களால் ஆன 20 அடி உயரம் உள்ள தடுப்புச்சுவர் மீது 15 அடி அகலத்தில் கான்கிரீட்டிலான பாதை அமைக்கப்பட்டுள்ளது.