தமிழ்நாடு முழுவதும் நேற்று மாட்டுப்பொங்கல் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. அதில், பொதுமக்கள் வீடுகளில் வளர்க்கும் மாடுகளைக் குளிப்பாட்டி, அலங்கரித்து மாட்டுப்பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடினர். ஆனால், நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள கடற்கரையோரக் கிராமங்களில் வசிக்கும் மீனவர்கள், வித்தியாசமாக படகுப் பொங்கல் விழா கொண்டாடினர்.
அங்கு மாடு... இங்கு படகு! - பொங்கலில் கலக்கும் மீனவர்கள் - boat pongal celebrate by nagai fisheries
நாகை: கடற்கரையோரம் வசிக்கும் மீனவர்கள் பொங்கலை வித்தியாசமாக படகுகளில் கொண்டாடியது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
படகு பொங்கல் விழா
இந்த விழாவில், மீனவர்கள் தங்களிடமிருந்த 100க்கும் மேற்பட்ட விசைப்படகுகளையும் 500க்கும் மேற்பட்ட பைபர் படகுகளையும் சுத்தம் செய்து, படகுகளில் கரும்புகளைக் கட்டி அலங்கரித்திருந்தனர். பின்னர், மீனவர்கள் தங்கள் குடும்பத்தினரை படகில் ஏற்றிக்கொண்டு கடலில் உலா வந்து மகிழ்ச்சியாக விழாவைக் கொண்டாடினர்.
இதையும் படிங்க: மாட்டு பொங்கலன்று சங்கமிக்கும் நாட்டு மாடுகள்!
TAGGED:
படகு பொங்கல் விழா