உலக மீன்வள தினத்தை முன்னிட்டு நாகை மாவட்டம் பூம்புகாரில் மீனவர்களுக்கான நீச்சல் போட்டி நடைபெற்றது. மீன்வளத்துறை சார்பில் நடைபெற்ற இப்போட்டியில் சந்திரபாடி, பூம்புகார், பழையார், திருமுல்லைவாசல் உள்ளிட்ட மீனவ கிராமங்களைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்ட மீனவர்கள் பங்கேற்றனர்.
போட்டியை மீன்வளத்துறை உதவி இயக்குனர் நடராஜன் தொடக்கி வைத்தார். போட்டியின் முடிவில் சந்திரபாடி மீனவ கிராமத்தைச் சேர்ந்த சாரதி எனும் மீனவர் முதல் பரிசையும், பூம்புகாரைச் சேர்ந்த மகாதேவன் இரண்டாம் பரிசையும், முத்துமணி எனும் மீனவர் மூன்றாம் பரிசையும் வென்றனர்.