தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேளாண் மசோதாவை எதிர்த்து நாடு தழுவிய பரப்புரை இயக்கம்: - குமரவேல்

நாகப்பட்டினம்: வேளாண் மசோதா உள்ளிட்ட விவசாயிகள், மீனவர்களுக்கு எதிரான சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிற 28 ஆம் தேதி முதல் நாடு தழுவிய பரப்புரை இயக்கம் நடைபெறும் என்று தேசிய மீனவர் பேரவையின் துணைத் தலைவர் குமரவேல் தெரிவித்தார்.

kumaravel
kumaravel

By

Published : Sep 24, 2020, 8:24 PM IST

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்ட திருத்த மசோதாவிற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தேசிய மீனவர் அமைப்பின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாகப்பட்டினத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மத்திய அரசின், மீன்வள கொள்கை, இஐஏ, வேளாண் மசோதா உள்ளிட்ட தொழிலாளர்களின் உரிமையை பறிக்கக் கூடிய கருப்பு சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேசிய மீனவர் பேரவையின் துணை தலைவர் குமரவேல், "மத்திய அரசின் புதிய வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், விவசாயிகள் மீனவர்களுக்கு எதிரான சட்டங்களை கண்டித்தும் வருகிற 28ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து பரப்புரை செய்யப்படும்.

தேசிய மீனவர் பேரவையின் துணைத் தலைவர் குமரவேல்

புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் தொடங்கவுள்ள பரப்புரை இயக்கத்தில், தொழிற் சங்கங்கள், விவசாய சங்கங்கள், மீனவ இயக்கங்களை ஒருங்கிணைத்து நவம்பர் 10ஆம் தேதி முதல் தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்" என்றார்.

இதையும் படிங்க:துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 22 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் இரங்கல்!

ABOUT THE AUTHOR

...view details