நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்ட மீனவ கிராமங்களின் ஆலோசனைக் கூட்டம் நாகை அக்கரைப்பேட்டை மீன்பிடித்துறைமுகத்தில் நேற்று முன்தினம் (மார்ச் 31) நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மீன் வளத்தை பாதிக்கும் சுருக்குவலை மற்றும் இரட்டை மடி வலை, ஸ்பீடு இன்ஜின் ஆகியவற்றைப் பயன்படுத்தும் காரைக்கால் மாவட்ட மீனவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பான ஆலோசனை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்ட மீனவர்கள் சிறு தொழில் உள்ளிட்ட அனைத்து விசைப்படகுகளும், காரைக்கால் மாவட்ட கடற்பரப்பில் மட்டுமே மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள வேண்டும்.
நாகையில் நடைபெற்ற 6 மாவட்ட மீனவர்கள் கூட்டத்தில் முடிவு டீசலுக்கு வரி விலக்கு:மேலும், தமிழ்நாடு கடல்பகுதியில் மீன் பிடிக்க கூடாது எனவும், மீறி மீன் பிடிக்கும் மீனவர்களின் விசைப்படகுகளைப் பிடித்து துறைமுகத்தில் நிறுத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
அதேபோல், மீனவ சமுதாயத்தைக் காப்பாற்றும் வகையில், மீனவர்களின் படகுகளுக்கு பிடிக்கப்படும் டீசல் அனைத்திற்கும் தமிழ்நாடு அரசு, முற்றிலுமாக வரி விலக்கு வழங்க வேண்டும்.
ஸ்பீடு இன்ஜின் கூடாது:மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் உத்தரவை மீறி பழையார், திருமுல்லைவாசல், பூம்புகார், சந்திரபாடி ஆகிய கிராமங்களில் விசைப்படகுகளில் பயன்படுத்தும் ஸ்பீடு இன்ஜினை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஒரு கோடி ரூபாய் கடன் வாங்கி கொடுப்பதாகக்கூறி கம்பி நீட்டிய 2 பேர் கைது