நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் வெளியூர் மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதிக்க வலியுறுத்தி பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மூன்றாவது நாளாக தொடரும் இவர்களது போராட்டத்தில் 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று சேர்ந்துள்ளனர்.
இந்நிலையில், இன்று (அக்.31) வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி நாயர் முன்னிலையில் மீன்வளத் துறை உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்ட அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது.