தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நடுக்கடலில் தத்தளித்த அந்தமான் மீனவர்களை  மீட்ட இந்திய கடலோரா காவல் படையினர்!

நாகப்பட்டினம்: இந்திய கடலோர காவல் படையினரால் நடுக்கடலில் மீட்கப்பட்ட அந்தமான் மீனவர்கள் 5 பேர் காரைக்கால் தனியார் துறைமுகத்திற்கு கப்பல் மூலம் அழைத்து வரப்பட்டனர்.

fishermen-stranded-in-the-mediterranean-indian-coast-guard-rescued
fishermen-stranded-in-the-mediterranean-indian-coast-guard-rescued

By

Published : Feb 19, 2021, 10:00 PM IST

கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி காரைக்காலுக்கு கிழக்கே 205 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவில் படகு ஒன்று பழுதாகி நிற்பதாக இந்திய கடலோர காவல்படை மையத்திற்கு சிக்னல் கிடைத்துள்ளது.

இதையடுத்து கண்காணிப்பு விமானம் அனுப்பி பார்வையிட்ட பின்பு, படகு பழுதாகி நிற்பதை உறுதிப்படுத்திய கடலோரக் காவல்படையினர், அங்கு அருகாமையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருக்கும் இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான அன்னிபெசன்ட் கப்பலுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

பின்னர் அந்தமான் மீனவர்கள் சின்னசாமி, செல்வ நாயகம், கோகுல் ராஜ், ஜேம்ஸ், சரவணன் ஆகிய ஐந்து பேரையும் மீட்ட இந்திய கடலோர காவல் படையினர் அவர்களை காரைக்கால் தனியார் துறைமுகம் அழைத்து வந்தனர்.

தொடர்ந்து மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். படகு பழுது நீக்கம் செய்ய ராமநாதபுரம் வந்த தாங்கள், நடுக்கடலில் 18 மணி நேரம் தவித்ததாகவும், தத்தளித்த தங்களை மீட்ட கடலோர காவல் படைக்கு அந்தமான் மீனவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:அதிவேகமாகச் சென்ற பேருந்து: கீழே விழுந்த பெண் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details