நாகப்பட்டினம் மாவட்டம் தாளம்பேட்டை, கீழமூவர்கரை, மடத்துக்குப்பம், திருமலைராயன்பட்டினம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் முத்துலிங்கம், ரஞ்சித், ராஜேஷ், முருகானந்தம். இவர்கள் நால்வரும் கோடியக்கரையிலிருந்து பாண்டியன் என்பவருக்குச் சொந்தமான படகில் கடந்த 7ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
இவர்கள் கோடியக்கரையின் தென்கிழக்குப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருக்கையில் அவர்களின் படகில் எரிபொருள் தீர்ந்ததால் காற்றின் வேகத்தில் திசைமாறி இலங்கை கடற்பகுதியில் கரை ஒதுங்கியுள்ளனர். இதனையடுத்து அருகில் இருந்த இலங்கை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைக்குள்படுத்தப்பட்டனர்.