தடை செய்யப்பட்ட என்ஜின்களை பயன்படுத்தி கடலில் மீன் பிடிப்பதால், மீன் வளம் அழிந்து போவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அதிவேக என்ஜின்களை பயன்படுத்தி மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு, மீன் வளத் துறையினர் அதனை அகற்றிக் கொள்ள சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர்.
இதனையடுத்து இன்று (அக்.13) நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில், நாகை, காரைக்கால் ஆகிய மாவட்ட மீனவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், காரைக்கால், கிளிஞ்சல்மேடு, தரங்கம்பாடி, பழையார் உள்ளிட்ட 54 மீனவ கிராம பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.