தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறு தொழில் பாதிக்கப்பட்டால் தொடர் போராட்டம் - மீனவர்கள் தீர்மானம் - etv bharat

தரங்கம்பாடியில் நடைபெற்ற மாவட்ட மீனவ கிராமங்களின் ஆலோசனைக் கூட்டத்தில் சிறுதொழில் பாதிக்கப்பட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மீனவர்கள் தீர்மானம்
மீனவர்கள் தீர்மானம்

By

Published : Aug 4, 2021, 10:53 PM IST

மயிலாடுதுறை: தரங்கம்பாடியில் மாவட்ட கடலோர மீனவ கிராமங்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மீனவ பஞ்சாயத்தார்கள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர்.

இந்தக் கூட்டத்தின் முடிவில், "ஒரு வார காலத்திற்கு மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தின்படி 600 கண் வலையை பயன்படுத்தக்கூடாது, சிறு தொழில்கள் பாதிக்காதவாறு நடவடிக்கை மேற்கொள்ள முதலமைச்சர், மீன்வளத் துறை அமைச்சர், ஆணையரிடம் வலியுறுத்த வேண்டும்.

மீனவர்கள் தீர்மானம்

மீன்வளத் துறையின் தொடர் சோதனையால் சிறுதொழில் பாதிக்கப்பட்டால் நாகப்பட்டினம், காரைக்கால், மயிலாடுதுறை ஆகிய மாவட்ட மீனவர்கள் இணைந்து தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்" எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையும் படிங்க:கரோனா விழிப்புணர்வு வாரம்: இலவச சித்த மருந்துகள் விநியோகம்

ABOUT THE AUTHOR

...view details