தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுருக்குமடி வலை அனுமதி போராட்டம் ஒத்திவைப்பு - nagai fisherman protest adjournment

நாகை: மாவட்ட அலுவலர்கள் பேச்சுவார்த்தையை அடுத்து மீனவர்கள் சுருக்குமடி வலைக்கு அனுமதி வழங்கக்கோரி நடத்திய போராட்டத்தை ஒத்திவைத்துள்ளனர்.

சுருக்குமடி வலை அனுமதி போராட்டம் ஒத்திவைப்பு
சுருக்குமடி வலை அனுமதி போராட்டம் ஒத்திவைப்பு

By

Published : Jul 11, 2020, 8:17 PM IST

நாகை மாவட்டம், நம்பியார் நகர், திருமுல்லைவாசல், பூம்புகார் உள்ளிட்ட மீனவ கிராமங்களில் சுருக்குமடி வலைக்கு அனுமதி வழங்கவேண்டும் என, மீனவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மீனவ பிரதிநிதிகளிடையே அமைதி பேச்சு வார்த்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மத்திய மண்டல ஐ.ஜி ஜெயராம், மாவட்ட ஆட்சியர் பிரவின் பி நாயர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் ஆகியோர் மீனவ பிரதிநிதிகளிடையே இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது அரசிடம் இந்த விவகாரம் குறித்து பேசி வரும் புதன்கிழமை (ஜூலை 15) உறுதியாக தகவல் தெரிவிக்கப்படும் என்று அலுவலர்கள் உறுதி அளித்தனர். மாவட்ட அலுவலர்களின் பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அதிவேக விசைப் படகுக்கு அனுமதிக்கோரி மீனவர்கள் சாலை மறியல்

ABOUT THE AUTHOR

...view details