தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுருக்குமடி வலைக்கு அனுமதி வழங்கக் கோரி பூம்புகார் மீனவர்கள் மனு - Fishermen seeking permission to net in Churmuadi

மயிலாடுதுறை மாவட்டத்தில் சுருக்குமடி வலைக்கு அனுமதி வழங்கி மீனவர்களிடையே சுமூக தீர்வு காண நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பூம்புகார் மீனவ கிராம பஞ்சாயத்தார் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்.

சுருக்குமடி வலைக்கு அனுமதி வழங்கி கோரி மீனவர்கள் -மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பியிடம் மனு
சுருக்குமடி வலைக்கு அனுமதி வழங்கி கோரி மீனவர்கள் -மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பியிடம் மனு

By

Published : Jul 5, 2022, 10:41 PM IST

மயிலாடுதுறை: தமிழ்நாடு, பாண்டிச்சேரி உள்ளிட்ட அனைத்து கடலோர மாவட்டங்களிலும் சுருக்குமடி வலை தொழில் நடைபெறுவதாகவும், மயிலாடுதுறை மாவட்டத்தில் சுருக்குமடி வலை தொழிலை அனுமதிக்க வலியுறுத்தி பூம்புகார் மீனவ பஞ்சாயத்தார்கள் தலைமையில் மீனவ கிராமத்தினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா மற்றும் மாவட்ட ஆட்சியர் இரா.லலிதாவிடம் மனு அளித்தனர்.

அந்த மனுவில், 2004ஆம் ஆண்டு முதல் சுருக்குமடி வலை பயன்படுத்தி மீன்பிடி தொழில் செய்துவந்தோம். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 28 மீனவ கிராமங்களில் சின்னூர்பேட்டை முதல் கொடியம்பாளையம் வரை 25 கிராமங்களில் இத்தொழில் நடந்தது.

கடந்த 2020ஆம் ஆண்டு தரங்கம்பாடி, வாணகிரி உள்ளிட்ட 8 கிராமங்கள் சுருக்குமடி வலை தொழில் செய்யாமல் நிறுத்திகொண்டு, ஒரு சில வருத்தங்களின் காரணமாக எங்களையும் தொழில் செய்ய விடாமல் தடுக்கின்றனர். சுருக்குமடி வலை தொழில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி உட்பட அனைத்து கடலோர மாவட்டங்களிலும் நடைபெறுகிறது.

சுருக்குமடி வலைக்கு அனுமதி வழங்கி கோரி மீனவர்கள் -மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பியிடம் மனு

மயிலாடுதுறை மாவட்டத்தில் மட்டும் சுருக்குமடி வலை தொழில் நடைபெறவில்லை. இதனால் மயிலாடுதுறை மாவட்டத்தில் 15 கிராமங்களில் உள்ள மீனவர்கள் வறுமையாலும், பொருளாதார ரீதியாகவும் மனஉளைச்சலுக்கு உட்பட்டு வாழ வழியில்லாமல் உள்ளோம்.

மற்ற மாவட்டங்களில் உள்ள சுருக்குமடி வலை பயன்படுத்தும் மீனவர்கள் நமது மாவட்ட கடற்பகுதியில் வந்து மீன்பிடிப்பதை அனுமதிக்கும் தரங்கம்பாடி வாணகிரி கிராமமும், மாவட்ட நிர்வாகமும், நாங்கள் இத்தொழில் செய்ய அனுமதிக்க வேண்டும்.

ஆழ்கடல் சென்று மீன்பிடிப்பதால் அருகில் உள்ள மீனவ கிராமங்களுக்கு எந்த ஒரு இடையூறும் ஏற்படாது. மாவட்ட நிர்வாகத்தினர் அறிவுரைகளுக்கு உட்பட்டு சட்டம் ஒழுங்கு கெடாத வகையில் மீன்பிடி தொழில் செய்வோம். சுருக்குமடி வலை பயன்படுத்துவது குறித்து இருதரப்பு மீனவர்களையும் அழைத்துப் பேசி சுமூக தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க:சுருக்குமடி வலையை பயன்படுத்த முயற்சிக்கும் மீனவர்கள் மீது நடவடிக்கை வேண்டும்:மீனவர்கள் மனு!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details