தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 27, 2020, 5:21 PM IST

Updated : Nov 27, 2020, 6:24 PM IST

ETV Bharat / state

கருங்கல் தடுப்பு அமைக்க மீனவர்கள் கோரிக்கை

மயிலாடுதுறை: தரங்கம்பாடியில் கிராமத்துக்குள் கடல்நீர் நுழைவதை தடுக்க கருங்கல் தடுப்பு அமைக்கக் கோரி அரசிடம் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருங்கல் தடுப்பு அமைக்க மீனவர்கள் கோரிக்கை
கருங்கல் தடுப்பு அமைக்க மீனவர்கள் கோரிக்கை

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகேயுள்ள சந்திரபாடி பகுதியில் 900 மீனவ குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதி தாழ்வாக இருப்பதால் பேரிடர் காலங்களில் கடல் அரிப்பு ஏற்படுகிறது.

தரங்கம்பாடியில் நிவர் புயல் காரணமாக கடல் சீற்றம் ஏற்பட்டது.

கருங்கல் தடுப்பு அமைக்க மீனவர்கள் கோரிக்கை

அப்போது கடல்நீர் கிராமத்துக்குள் புகுந்தது.

கருங்கல் தடுப்பு அமைக்க மீனவர்கள் கோரிக்கை

தொடர்ந்து கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நான்கு படகுகள் கிராமத்துக்குள் அடித்து வரப்பட்டன.

கருங்கல் தடுப்பு அமைக்க மீனவர்கள் கோரிக்கை

இந்நிலையில், தரங்கம்பாடியில் கடல்நீர் கிராமத்துக்குள் நுழைவதை தடுக்க கருங்கல் தடுப்பு அமைக்க வேண்டும், சந்திரபாடி கடலில் முட்டுக்கரை ஆறு கலக்கும் முகத்துவாரத்தை தூர்வார வேண்டும், பைபர் படகுகளை நிறுத்திவைக்க வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என அரசிடம் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: 48 மணி நேரத்தில் அடுத்த புயல்!

Last Updated : Nov 27, 2020, 6:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details