மயிலாடுதுறை: திருமுல்லைவாசல், மடவாமேடு, பூம்புகார், சந்திரபாடி உள்ளிட்ட இடங்களில் மீனவர்கள் சுருக்குமடி வலைக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும், அதனை மறுக்கும் பட்சத்தில் 1983 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தில் உள்ள 21 சட்டங்களை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி அண்மையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய மாவட்ட ஆட்சியர், சுருக்குமடி வலைக்கு அனுமதி வழங்க முடியாது, அதற்கு பதிலாக மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தை அமல்படுத்துவதாக அறிவித்திருந்தார்.
எட்டு நாள்களாக ஆய்வு
இந்த அறிவிப்பையடுத்து கடந்த எட்டு நாள்களாக மீன்வளத்துறை மற்றும் மீன்வளத்துறை அமலாக்க பிரிவு காவல்துறையினர், மீனவ கிராமங்களில் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் தரங்கம்பாடி மற்றும் தொடுவாய் கிராமங்களில் அலுவலர்கள் இன்று (ஜூலை 27) திடீர் ஆய்வு மேற்கொண்டனர். வலைகள், படகுகளின் நீளம், இஞ்சின் திறன் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
முன்னறிவிப்பின்றி ஆய்வு