தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பூம்புகாரில் மீனவர்கள் சுருக்குமடி வலையுடன் மீன் பிடிக்க தடை! - ban fishing on illicit net

பூம்புகாரில் மீன்பிடி தடைகாலம் முடிவடைந்து, சுருக்குமடி வலையுடன் கடலுக்குப் புறப்பட்ட விசைப்படகு மீனவர்களுக்கு மீன்வளத்துறை அதிகாரிகள் திடீர் தடை பிறப்பித்ததால் மீனவர்கள் திரும்பிச் சென்றனர்.

illicit nets
சுருக்குமடி வலை

By

Published : Jun 16, 2023, 12:37 PM IST

மீனவர்கள் சுருக்குமடி வலையுடன் கடலில் மீன் பிடிக்கத் தடை

மயிலாடுதுறை: சீர்காழி அடுத்த பூம்புகாரில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு சுமார் 60 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அறிவிக்கப்பட்டது. தற்போது தடைக்காலம் முடிவடைந்து, விசைப்படகு மீனவர்கள் சுருக்குமடி வலையுடன் கடலுக்கு மீன் பிடிக்க தயாராகிக் கொண்டிருந்தனர்.

சுமார் 3 ஆண்டுகளுக்குப் பிறகு விசைப்படகு மீனவர்கள் சுருக்குமடி வலையுடன் கடலுக்குள் மீன் பிடிப்பு முறையைத் தொடங்கி வைக்க உத்திரப்பிரதேச மாநில மீன்வளத்துறை அமைச்சரும், தேசிய மீனவர் கட்சியின் தேசியத் தலைவருமான சஞ்சய் நிஷாந்த் மற்றும் டெல்லி டாக்டர் தோமர் ஆகியோர் பூம்புகாருக்கு வந்தனர்.

அப்போது, அங்கு வந்த அதிகாரிகளை விசைப்படகு மீனவர் சங்க நிர்வாகிகள் வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து சுருக்குமடி வலை விசைப்படகு மீனவர்கள், மீன்வளத்துறை அதிகாரிகள் மூலம் சந்தித்து வரும் இன்னல்களை, தேசிய தலைவர் சஞ்சய் நிஷாந்திடம் கூறினர். அதனைத் தொடர்ந்து மீனவர்களிடையே சஞ்சய் நிஷாந்த் கலந்துரையாடினார்.

இதனிடையே கடலுக்குள் மீன் பிடிக்க சுருக்குமடி வலையுடன் தயாராக இருந்த இரண்டு விசைப்படகுகளையும், உச்ச நீதிமன்றம் தெரிவித்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றப்படவில்லை என்று கூறி கடலுக்குள் செல்வதற்கு மீன்வளத்துறை அதிகாரிகள் அனுமதி மறுத்தனர்.

இதனால் கடைசி நேரத்தில் வந்து இவ்வாறு கூறுவது முறையா எனக் கூறி மீனவர்கள் அதிருப்தி அடைந்தனர். தொடர்ந்து, சீர்காழி கோட்டாட்சியர் அர்ச்சனா, மீன்வளத்துறை இணை இயக்குனர், காவல் துணை கண்காணிப்பாளர் லாமேக், கடலோர காவல் படை இன்ஸ்பெக்டர் வெர்ஜினியா மற்றும் தேசிய மீனவர் கட்சி நிர்வாகிகள் விசைப்படகு மீனவ சங்க பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்ற அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது.

இதில் சுருக்குமடி விசைப்படகு மீனவர்கள் தரப்பில், “கடந்த 3 ஆண்டுகளாக மீன்பிடி தொழிலுக்கு செல்ல முடியாமல் கடுமையான கஷ்டத்திலும், நெருக்கடியிலும் கடன்பட்டு வாழ்க்கையை நடத்தி வருகிறோம். தற்போது நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் அதிகாரிகள் தொழிலுக்கு அனுமதி மறுப்பது கண்டிக்கத்தக்கது.

ஒட்டுமொத்த வாழ்வாதாரமும் இழந்து நிற்கும் எங்களுக்கு எந்த தொந்தரவுகளும் இல்லாமல் நிம்மதியாக தொழில் செய்ய விடுங்கள்” என்ற கோரிக்கையை முன் வைத்தனர். மேலும் அந்த கூட்டத்தின் முடிவில் நீதிமன்றம் தெரிவித்துள்ள வழிகாட்டு விதிமுறைகளின்படி ஆய்வு செய்யப்பட்டு, ஒரு வாரத்திற்குள் அனுமதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

இதனைத் தொடர்ந்து முதல் நாளில் கடலுக்கு தொழிலுக்கு செல்ல முடியாமல் மீனவர்கள் பலரும் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். இதனிடையே, பூம்புகார் துறைமுகம் பகுதியில் ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Senthil Balaji: செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனைக்கு மாற்றம்!

ABOUT THE AUTHOR

...view details