நாகப்பட்டினத்தில் தமிழ்நாடு நில உரிமை கூட்டமைப்பு மற்றும் தேசிய மீனவர் பேரவை சார்பில் மீனவர் பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கடல் வளங்களையும், பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க உறுதி கூறும் மக்களவை உறுப்பினருக்கு, மீனவர்கள் வாக்களிப்பது உள்ளிட்டவைகள் விவாதிக்கப்பட்டன.
மீனவர்களுக்கு தனி அமைச்சகம் அமைக்கும் கட்சிக்கு ஆதரவு -தேசிய மீனவர் பேரவை - மீனவர் அமைச்சகம்
நாகை: மீனவர்களுக்கு தனி அமைச்சகம் அமைத்துத் தர உறுதி அளிக்கும் கட்சிக்கு மக்களவைத் தேர்தலில் ஆதரவு அளிப்போம் தேசிய மீனவர் பேரவை அறிவித்துள்ளது.
nagai
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேசிய மீனவர் பேரவை துணைத்தலைவர் குமரவேல்,
'மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க இரட்டைமடி, சுருக்குமடி வலைகளை தடை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான தனி அமைச்சகம் அமைத்துத் தர உறுதி அளிக்கும் கட்சிக்கு இம்முறை மீனவ சமுதாயத்தின் வாக்கும், ஆதரவும் அளிக்கப்படும்' என்று தெரிவித்தார்.