நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள ஆறுகாட்டுத்துறை, விழுந்தான்மாவடி,புஷ்பவனம் உள்ளிட்ட 15 கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்டட மீன்பிடி வலையை பயன்படுத்தியதாக கீச்சாங்குப்பம் - வெள்ளப்பள்ளம் ஆகிய இரு கிராம மீனவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வேதாரண்யம் தாலுகா, கீழையூர் தாலுகாவைச் சேர்ந்த 15 மீனவ கிராமத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.