தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

படகிலிருந்து தவறி விழுந்த மீனவர் மாயம்: தேடும் பணி தீவிரம்! - மயிலாடுதுறை மாவட்ட செய்திகள்

மயிலாடுதுறை: பழையார் துறைமுகம் அருகே படகிலிருந்து தவறி விழுந்த மீனவரை கடலோர காவல் படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

படகிலிருந்து தவறி விழுந்த மீனவர் மாயம்
படகிலிருந்து தவறி விழுந்த மீனவர் மாயம்

By

Published : Aug 15, 2020, 10:54 AM IST

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகேயுள்ள பழையார் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவர் தனக்கு சொந்தமான விசைப்படகில் 7 பேருடன் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றுள்ளார்.

அப்பொழுது பழையார் துறைமுகத்தில், இவர்கள் ஏற்கனவே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்டம் நரிப்பையூரைச் சேர்ந்த சக்கரை முகமது, அவரது மகன் முகமது ஃபரீது (31) ஆகியோரை சந்தித்துள்ளனர். பின்னர் அவர்கள் அனைவரும் இணைந்து பழையார் துறைமுகத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

திடீரென ஏற்பட்ட கடல் சீற்றத்தால் முகமது ஃபரீது விசை படகிலிருந்து தவறி விழுந்து மாயமானார்.

உடனே மற்ற மீனவர்கள் கடலில் தேடும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் அவர் கிடைக்காததால் கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதனடிப்படையில் சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த கடலோர காவல் படையினர் முகமது பரீதை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கடல் அலையால் குடியிருப்புகள் சேதம்!

ABOUT THE AUTHOR

...view details