தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மீனவர் கொலை: ஆறு பேர் கைது - மயிலாடுதுறை அண்மைச் செய்திகள்

மயிலாடுதுறை: புதுப்பேட்டை, வானகிரி கிராமங்களைச் சேர்ந்த மீனவர்களிடையே நடுக்கடலில் ஏற்பட்ட தகராறில் மீனவர் ஒருவர் கொல்லப்பட்டார். இது தொடர்பாக இரண்டு சிறுவர்கள் உள்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீனவர் கொலை; ஆறு பேர் கைது!
மீனவர் கொலை; ஆறு பேர் கைது!

By

Published : Apr 16, 2021, 6:00 PM IST

Updated : Apr 16, 2021, 6:12 PM IST

மயிலாடுதுறை மாவட்டம், புதுப்பேட்டை, வானகிரி கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று (ஏப்.15) அதிகாலை நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது புதுப்பேட்டை மீனவர்கள் வீசிய வலையின் மீது வானகிரி மீனவர்களின் படகு உரசியுள்ளது. இதனையடுத்து இரு கிராம மீனவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு தொடர்ந்து கைகலப்பாக மாறியது. இதில் படுகாயமடைந்த புதுப்பேட்டை கிராம மீனவர் மூர்த்தி (45), காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மூர்த்தி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில், புதுப்பேட்டை மீனவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், வானகிரியைச் சேர்ந்த சதீஷ், ஏழுமலை, செல்லதுரை, ராஜீவ்காந்தி, சிறுவர்கள் நிதிஷ், நிதின் ஆகிய ஆறு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

இதையும் படிங்க : இந்தியா உள்பட 13 நாடுகளிலிருந்து வெளியேறும் சிட்டி வங்கி!

Last Updated : Apr 16, 2021, 6:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details