தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நடுக்கடலில் மிதந்துவந்த 32 கிலோ கஞ்சா: காவல் துறையினர் விசாரணை - கடலோர காவல்துறையினர் விசாரணை

மயிலாடுதுறை: சின்னங்குடி மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது மிதந்துவந்த கோணிப்பையிலிருந்த 32 கிலோ கஞ்சா பொட்டலங்களைத் தரங்கம்பாடி கடற்கரையோர காவல் படையினரிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Fisherman found cannabis bag inside sea
நடுக்கடலில் கஞ்சா கண்டெடுப்பு

By

Published : Jun 18, 2020, 7:21 AM IST

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா சின்னங்குடி மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயகாந்த் (35). இவர் தனது பைபர் படகில் சக மீனவர்களுடன் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர்.

28 நாட்டிகல் மைல் தொலைவில் காரைக்கால் அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, கடலில் வெள்ளைநிற கோணிப்பை மிதந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதைக் கண்ட மீனவர்கள் அந்தப் பையை எடுத்துப் பிரித்து பார்த்தபோது 32 கிலோ எடையுடன் கஞ்சா 16 பொட்டலங்களில் இருந்தது தெரியவந்தது.

கடலில் மீனவர்களால் கண்டெடுக்கப்பட்ட கஞ்சா

இதையடுத்து கரை திரும்பிய மீனவர்கள், கடலில் கண்டெடுக்கப்பட்ட 32 கிலோ கஞ்சா மூட்டையை கிராம பஞ்சாயத்தாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இது குறித்து கிராம பஞ்சாயத்தார்கள் அளித்த தகவலின்பேரில் தரங்கம்பாடி கடற்கரையோர காவல்படை காவல் துறையினர் சின்னங்குடி கிராமத்துக்கு விரைந்துசென்று கஞ்சா மூட்டையைக் கைப்பற்றினர். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details