தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாகை அருகே படகில் இருந்து தவறி விழுந்த மீனவர் மாயம்! - nagapattinam fishermen

Fisherman missing: நாகையில் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது படகில் இருந்து தவறி விழுந்த மீனவரை தேடும் பணியில் சக மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

fisherman-fell-into-the-sea
நாகை மீனவர் மாயம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 3, 2024, 6:56 PM IST

நாகப்பட்டினம்:நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவர் கிராமத்தைச் சேர்ந்த சந்திரன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில், கடந்த ஜனவரி 1ஆம் தேதி சந்திரன், ஜீவா, மணி, சரத்குமார், ரமேஷ், லட்சுமணன், சக்திவேல் ஆகிய 7 மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், இன்று அதிகாலை (ஜன.03) கோடியக்கரை கடற்பகுதியில் இருந்து 6 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, சாமந்தான் பேட்டையைச் சேர்ந்த சரத்குமார் (30) என்ற மீனவர் கடலில் தவறி விழுந்துள்ளார் எனத் தெரிகிறது.

இதனைப் பார்த்த சக மீனவர்கள் கடலில் குதித்து சரத்குமாரைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதனையடுத்து, இது குறித்து மீன்வளத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் அளித்துள்ளனர். பின்னர் மீன்வளத்துறை அதிகாரிகள் வேதாரண்யம் பகுதியில் இருந்து கடலில் மீன்பிடிக்கச் சென்று இருக்கும் மீனவர்களிடம், தொலைபேசி மூலம் கடலில் தவறி விழுந்த மீனவரைப் பார்த்தால், உடனே தகவல் அளிக்க வேண்டும் என அறிவிப்பு செய்துள்ளனர்.

மேலும், அக்கரைப்பேட்டையில் இருந்தும் விசைப்படகுகள் மூலம் சக மீனவர்களும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மாயமான மீனவர் சரத்குமாருக்கு மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மீனவர் கடலில் தவறி விழுந்து மாயமாகி உள்ள சம்பவம், அவரது குடும்பத்தினர் மற்றும் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:எண்ணூர் எண்ணெய் கழிவால் பல்வகை உயிரினங்கள் பாதிப்பு.. பெலிக்கான் பறவைகளுக்கு மறுவாழ்வு!

ABOUT THE AUTHOR

...view details