தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சீர்காழியில் கடலில் மூழ்கி மீனவர் உயிரிழப்பு! - Fisherman dead in sirkazhi

மயிலாடுதுறை: சீர்காழி அருகே கடலில் மூழ்கி மீனவர் உயிரிழந்த சம்பவம் குறித்து கடலோரக் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மீனவர் உயிரிழப்பு  நாகையில் மீனவர் உயிரிழப்பு  சீர்காழியில் மீனவர் உயிரிழப்பு  Fisherman dead in Nagapattinam  Fisherman dead in sirkazhi  Fisherman dead in
Fisherman dead in Nagapattinam

By

Published : Jan 19, 2021, 5:58 PM IST

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகா வானகிரி மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் விஜயபாலன் (30). இவர் காளியப்பன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் கிருஷ்ணன், பாலு, பாரதி, தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட 10 பேருடன் இன்று (ஜன.19) அதிகாலை மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர்.

உயிரிழப்பு

முன்னதாக, கரையிலிருந்த பைபர் படகை கடலில் தள்ளிவிட்டு விஜயபாலன் உள்ளிட்ட சிலர் மீண்டும் படகில் ஏறியுள்ளனர். அப்போது, கடல் அலை சீற்றமாக இருந்ததால், விஜயபாலன் படகிலிருந்து தவறி கிழே விழுந்து படகின் அடிப்பகுதியில் சிக்கி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, சக மீனவர்கள் விஜயபாலனின் உடலை மீட்டு கரை சேர்த்தனர்.

கடலில் மூழ்கி மீனவர் உயிரிழந்த மீனவர்

விசாரணை

இது குறித்து கடலோரக் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடல் சீற்றத்தை குறைப்பதற்கு வானகிரி கிராமத்தின் கடற்கரையோரம் கொட்டப்பட்டுள்ள கருங்கற்களை தூண்டில் வலைவை போல் கொட்ட மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் மீனவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:கல்குவாரி குட்டையில் மூழ்கி மூவர் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details