தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நடுகடலில் சீற்றம்: படகிலிருந்து நிலைதடுமாறி கடலில் விழுந்த மீனவர் பலி - பலி

நாகை: கடல் சீற்றம் காரணமாக, படகிலிருந்து தவறி விழுந்த மீனவர் பரிதமாக உயிரிழந்துள்ளார்.

File pic

By

Published : Jun 17, 2019, 11:46 PM IST

காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஜூன் 15ஆம் தேதி , ஆனந்தவேல் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் நாகையைச் சேர்ந்த 12 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். இவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென சூறை காற்று வேகமாக வீசியதால், படகு அலைகளுக்கு நடுவில் சிக்கி சாய்ந்தது.

இதில் படகில் இருந்த நாகை மாவட்டம், கீச்சாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்ற மீனவர் நிலைதடுமாறி தவறி விழுந்தார்.

பலியான மீனவர் செல்வம்

இதனை சற்றும் எதிர்பாராத சக மீனவர்கள் அவரை காப்பாற்ற முயற்சித்தனர். ஆனால் செல்வம் காலில் மீன்பிடி வலை சிக்கியதால் நிகழ்விடத்திலேயே கடலில் மூழ்கி பரிதாபமாக பலியானார்.

உயிரிழந்த செல்வத்தின் உடலை மீட்ட சக மீனவர்கள் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திற்கு நாளை (ஜூன் 18) கொண்டு வருகின்றனர். மீன்பிடிக்கச் சென்ற மீனவர் நடுக்கடலில் உயிரிழந்த சம்பவம் உறவினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details