மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா குட்டியாண்டியூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் காத்தவராயன். இவர் தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க மனு ஒன்றை அளித்தனர்.
அம்மனுவில், குட்டியாண்டியூரில் மீன் எடுத்து டிரான்ஸ்போர்ட் வேலை செய்து வருகிறேன். நாகை மாவட்டம் நம்பியார் நகர் மீனவ கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் ஒரு லட்சத்து 12 ஆயிரம் பணம் கொடுக்க வேண்டும் என்று கூறி குட்டியாண்டியூர் ஊர் பஞ்சாயத்தார்கள் அழைத்து என்னிடம் பேசினர்.
அப்போது சுரேஷ் என்பவர் எனக்கு தான் பணம்கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தேன். இதற்கு பஞ்சாயத்தார் சொல்வதை நீ கேட்க வேண்டும் அதை மீறினால் அபராதம் விதிப்பதோடு ஊரை விட்டு ஒதுக்கிவைப்பதாக கூறினர். எனக்கு வரவேண்டிய பணத்தை கேட்டால் பஞ்சாயத்தில் நான் கொடுக்க வேண்டுமென்று கூறுகிறீர்களே என்று கூறி ஒப்புகொள்ளாததால் என் குடும்பத்தை 3 ஆண்டுகளாக ஊரைவிட்டு ஒதுக்கிவைத்துவிட்டனர்.