தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நிவர் புயல்: மயிலாடுதுறைக்கு பேரிடர் மீட்புக் குழுவினர் வருகை - மயிலாடுதுறைக்கு பேரிடர் மீட்புக் குழுவினர் வருகை

நிவர் புயலை எதிர்கொள்ள மயிலாடுதுறையிலுள்ள அனைத்து தீயணைப்பு, மீட்புப்பணி நிலையங்களிலிருந்தும் தலா 2 கமாண்டோ படை வீரர்கள் வீதம் 20 பேர் வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர்.

பேரிடர் மீட்புக் குழுவினர்
பேரிடர் மீட்புக் குழுவினர்

By

Published : Nov 24, 2020, 2:50 PM IST

நாகப்பட்டினம்: மயிலாடுதுறை, மணல்மேடு, குத்தாலம், பூம்புகார்,பொறையாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீயணைப்பு, மீட்புப் பணி நிலையங்கள் உள்ளன. இவற்றின் மையப்பகுதியாக மயிலாடுதுறை உள்ளது.

மீட்பு உபகரணங்கள்

நிவர் புயல் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மாவட்டத்தின் எந்த பகுதியில் பேரிடர் நேரிட்டாலும் அங்கு சென்று உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபடும் வகையில் மயிலாடுதுறையின் அனைத்து நிலையங்களிலிருந்தும் தலா 2 கமாண்டோ வீரர்கள் வீதம் 22 பேர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

மீட்பு உபகரணங்கள்

மயிலாடுதுறை தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துக்குமார் தலைமையில் அனைத்து வீரர்களும் லைப் ஜாக்கெட், மூச்சுக்கருவி, மரம் அறுக்கும் கருவிகள், உயர் கோபுர மின்விளக்கு, கான்கிரீட் கட்டர், கயிறு உள்ளிட்ட மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.

பேரிடர் மீட்புக் குழுவினர்

இதையும் படிங்க:கும்மிடிப்பூண்டியில் நிவர் புயல் தடுப்பு நடவடிக்கையில் பொதுப்பணித் துறையினர் தீவிரம்

ABOUT THE AUTHOR

...view details