தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சீவல் கம்பெனியில் தீ விபத்து; ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் - factory

மயிலாடுதுறை அருகே சீவல் கம்பெனியில் தீ விபத்து ஏற்பட்டதில் ரூ.3 லட்சம் மதிப்பிலான சீவல் உள்ளிட்ட பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தது. விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சீவல் கம்பெனியில் தீ விபத்து; 3 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதம்
சீவல் கம்பெனியில் தீ விபத்து; 3 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதம்

By

Published : Aug 9, 2022, 10:21 PM IST

மயிலாடுதுறை:கூறைநாடு, செம்மங்குளம் தெற்குகரையில் கந்தன், பாண்டிதுரை என அப்பா மற்றும் மகன் ஆகியோர் மேற்கூரை சீட்டால் அமைக்கப்பட்ட வாடகை கட்டிடத்தில் சீவல் கம்பெனி வைத்து நடத்தி வருகின்றனர்.

இன்று மதியம் திடீரென்று சீவல் கம்பெனி தீபிடித்து எரியத் தொடங்கியுள்ளது. இது குறித்து அக்கம்பக்கத்தினர் தகவல் அளித்ததையடுத்து மயிலாடுதுறை தீயணைப்புதுறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீ பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர். இதில் ரூ.3 லட்சம் மதிப்பிலான சீவல் பாட்கெட்டுக்கள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து கருகி சாம்பலானது.

சீவல் கம்பெனியில் தீ விபத்து; 3 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதம்

சீவல் கம்பெனி வளாகத்தின் நடுவே நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வாகனத்தின் முன்பகுதி லேசாக கருகியிருந்தது. இந்த திடீர் தீ விபத்து எப்படி ஏற்பட்டது, மின்கசிவுகாரணமா அல்லது மர்ம நபர்கள் தீ வைத்தனரா என்ற கோணத்தில் மயிலாடுதுறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:விழுப்புரம் அருகே தீ விபத்து - 8 வீடுகள் சேதம்

ABOUT THE AUTHOR

...view details