மயிலாடுதுறையில்சீர்காழி மற்றும் தரங்கம்பாடி தாலுகா பகுதிகளில் கடந்த நவம்பர் மாதம் 11ஆம் தேதி பெய்த அதீத கனமழையால் பாதிக்கப்பட்ட 32 ஆயிரத்து 533 ஹெக்டேர் பயிர்களுக்கு, ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.13,500 நிவாரணம் தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.
அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ரூ.43 கோடியே 92 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட 40 ஆயிரம் விவசாயிகளுக்கு இந்த தொகை வழங்கும் பணி இன்று தொடங்கியது. சீர்காழி அருகே கடவாசல் துணை வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் துறை அமைச்சருமான மெய்யநாதன் மற்றும் மாவட்ட ஆட்சியர் லலிதா, சீர்காழி மற்றும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு வழங்கி துவக்கி வைத்தனர்.
இதன்மூலம் சீர்காழி தாலுகாவில் பாதிக்கப்பட்ட 22,220 ஹெக்டேர் விளைநிலங்களுக்குரிய 25,142 விவசாயிகள் ரூ.29 கோடியே 97 லட்சம் இழப்பீடு தொகையும், தரங்கம்பாடி தாலுகாவில் பாதிக்கப்பட்ட 8,000 ஹெக்டேர் விளைநிலத்திற்குரிய 9,736 விவசாயிகளுக்கு ரூ.10 கோடியே 80 லட்சம் இழப்பீடு தொகையும் வழங்கப்படவுள்ளது.