தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 16, 2022, 10:43 AM IST

ETV Bharat / state

உரத்தட்டுபாடு புகார் மீது உடனடி நடவடிக்கை- அமைச்சர் மெய்யநாதன்

உரத்தட்டுப்பாடு குறித்து புகார் இருந்தால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

உரத்தட்டுபாடு புகார் மீது உடனடி நடவடிக்கை- அமைச்சர் மெய்யநாதன்
உரத்தட்டுபாடு புகார் மீது உடனடி நடவடிக்கை- அமைச்சர் மெய்யநாதன்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் லலிதா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்துகொண்டு ரூ.39 லட்சம் மதிப்பிலான தையல் இயந்திரம் , பெட்ரோலில் இயங்கும் விலையில்லா இருசக்கர வாகனம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை 137 பயனாளிகளுக்கு வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்ளை சந்தித்த அமைச்சர், பாசன வாய்க்கால்களில் நடைபெறும் பாலம் கட்டுமானப் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படும் என்று தெரிவித்தார்.

உரத்தட்டுபாடு புகார் மீது உடனடி நடவடிக்கை- அமைச்சர் மெய்யநாதன்

தண்ணீர் திறந்து விடுவதற்கு முன்பே அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது என்றும், உரத்தட்டுப்பாடு குறித்து புகார் இருந்தால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கி கிடைக்கும் நெல் முட்டைகள் தொடர்பான பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றும் மெய்யநாதன் தெரிவித்தார். மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையத்திற்கு விரைவில் அடிக்கல் நாட்டப்படும் என்றும் அவர் கூறினார்.

இதையும் படிங்க:-தனியார் ரயில் சேவை - ரயில்வே அமைச்சருக்கு டி ஆர் பாலு கடிதம்

ABOUT THE AUTHOR

...view details