கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் பகுதியைச் சேர்ந்த பெண் காவலர், நாகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று (மார்ச் 13) பணியை முடித்துவிட்டு நாகையில் உள்ள ஆயுதப்படை காவலர் குடியிருப்பு வளாகத்திற்கு வந்தார்.
அப்போது அங்கு குடியிருக்கும் நாகூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் சிவக்குமார் (33) அவரை தடுத்து நிறுத்தி கீழே தள்ளி கன்னத்தில் கடித்து தவறாக நடக்க முயற்சி செய்தார்.
அதனைத் தொடர்ந்து அங்கு தப்பியோடிய பெண் காவலர், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அப்புகாரின் அடிப்படையில், காவல் துறையினர் சிவக்குமாரை பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
காவலரே பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்து கைதாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்கள்:காண்டூர் கால்வாயில் தள்ளிவிட்டு நண்பர் கொலை?...கைதான இளைஞர்!