தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மகளை பாலியல் தொந்தரவு செய்த தந்தை - குண்டர் சட்டத்தில் கைது! - குண்டர் சட்டத்தில் கைது

மகளை பாலியல் தொந்தரவு செய்த தந்தை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

குண்டர் சட்டத்தில் கைது
goondas act

By

Published : May 8, 2021, 4:53 PM IST

மயிலாடுதுறையில் ஈஸ்வரன்(34) என்பவர் தனது மனைவி, 12 வயது மகளுடன் வசித்து வருகிறார். இவர் சமையல் வேலை செய்து வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் சிறுமி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, சிறுமியிடம் அவர் தாய் விசாரித்ததில், தந்தை ஈஸ்வரன் 2 மாதங்களுக்கு மேலாக தாய் வேலைக்கு சென்ற பிறகு, சிறுமியிடம் தவறான முறையில் நடந்து கொண்டது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ஈஸ்வரனின் மனைவி அளித்த புகாரின் பேரில், மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல்துறை வழக்குப்பதிந்து, ஈஸ்வரனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த ஈஸ்வரனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா பரிந்துரை செய்துள்ளார். அதனடிப்படையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா, அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, நாகப்பட்டினம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஈஸ்வரன் திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.

இதையும் படிங்க: மதுரையில் சட்ட விரோதமாக சூதாட்டம்: ரூ. 64,330 பறிமுதல்!

ABOUT THE AUTHOR

...view details