தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொதுமக்களை விரட்டும் விஷவண்டு: தந்தை, மகள் பரிதாபமாக உயிரிழப்பு! - Kadalangudi village drowned in tragedy

நாகப்பட்டினம்: மயிலாடுதுறை அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை விஷவண்டு தாக்கியதில் தந்தை, மகள் உயிரிழந்தனர்.

nagapattinam
nagapattinam

By

Published : Jul 23, 2020, 12:38 PM IST

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை அருகே கடலங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார் (42). இவர் அதே பகுதியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், இன்று காலை தனது மகள் இன்சிகாவுடன் (3) வயல்வெளி பாதையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அங்குள்ள பனைமரத்தில் கூடு கட்டியிருந்த விஷ வண்டான கதண்டு அப்பகுதியில் செல்வோரை தாக்கி வருகிறது.

இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தை, மகளை தாக்கியதில், படுகாயமடைந்த இருவரும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இருந்தபோதும் இன்சிகா சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்ட தந்தை ஆனந்தகுமாரும் சிகிச்சைப் பலனின்றி உயிரிந்தார். அவருக்கு சங்கரி(36) என்ற மனைவியும் பவித்ரா (5) என்ற மற்றொரு மகளும் உள்ளனர்.

கதண்டு தாக்கி தந்தை, மகள் இறந்து போனது கடலங்குடி கிராமத்தினரை சோகத்தில் ஆழ்த்தியது. மேலும், விஷ வண்டு தாக்குதலில் காயமடைந்த மேலும் 3 பேர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதையும் படிங்க:பேராவூரணி தொகுதி எம்எல்ஏ-வுக்கு கரோனா!

ABOUT THE AUTHOR

...view details