தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மகள் காதல் திருமணம் - இரு மகள்கள், மனைவியை கொன்று தந்தை தற்கொலை - nagai family suicide case

நாகை அருகே தனது மனைவி, இரண்டு மகள்கள் ஆகியோரை கொலை செய்துவிட்டு, தந்தை தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

father-commits-suicide-by-killing-wife-and-daughters
father-commits-suicide-by-killing-wife-and-daughters

By

Published : Feb 18, 2022, 2:19 PM IST

நாகப்பட்டினம் :கீழ்வேளூர் ஒன்றியம் புதுச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன் (55). வீட்டிலேயே டீ மற்றும் டிபன் கடை நடத்தி வந்த லட்சுமணன், தனது மனைவி புவனேஸ்வரி (45), மகள்கள் தனலட்சுமி (21), வினோதினி (18), அட்சயா (15) ஆகியோருடன் குடும்பத்தோடு வசித்து வந்துள்ளார்.

மூத்த மகள் தனலட்சுமி நாகப்பட்டினத்தில் உள்ள தனியார் உடல் பரிசோதனை ஆய்வகத்தில் பணியாற்றி வந்துள்ளார். தனலட்சுமிக்கும் அதே கிராமத்தில் கீழதெருவைச் சேர்ந்த அப்பு என்கிற விமல்ராஜூக்கும் காதல் மலர்ந்துள்ளது. இருவேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், பெண்ணின் தந்தை லட்சுமணன் மகளின் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதனால், பெற்றோரின் எதிர்ப்பை மீறி கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு தனலட்சுமி, விமல்ராஜை திருமணம் செய்து அவரோடு கீழத்தெருவில் தனியாக வாழ்ந்து வருகிறார். இதனால், மன உளைச்சலில் இருந்து வந்த லட்சுமணன், கடந்த நான்கு தினங்களாக டீ கடையை திறக்காமல் சோகமாக இருந்து வந்துள்ளார்.

பரப்பரப்பான சூழல் நிலவுகிறது

இந்நிலையில், இன்று காலை 7 மணியாகியும், டீ கடை திறக்காததால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் அவரின் வீட்டிற்குச் சென்று சத்தம் எழுப்பியதுடன், கீழ்வேளூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த கீழ்வேளூர் காவல் துறையினர், வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது நான்கு பேர் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.

பின்னர், காவல் துறையினர் நடத்திய விசாரணையில் லட்சுமணன், மனைவி புவனேஸ்வரி மற்றும் இரண்டு மகள்கள் வினோதினி, அட்சயா ஆகியோர் மீது குழவி கல்லை தலையில் போட்டு, கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. சம்பவயிடத்தில் நாகை காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் நேரில் விசாரணை நடத்தினார். அதை தொடர்ந்து, நால்வரின் உடல்களும் உடற்கூராய்விக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

சம்பவம் குறித்து அறிந்த சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த நூற்றுகணக்கான பொதுமக்கள் அங்கு திரண்டதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. சம்பவ இடத்தில் மோப்பநாய் கொண்டு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க : பூக்கடை ஊழியர் வெட்டிக் கொலை - இருவர் தலைமறைவு!

ABOUT THE AUTHOR

...view details