நாகப்பட்டினம்: மகனின் பெட்ரோல் பங்க்கிற்கு அவரது தந்தை போட்ட வேலியை, கோட்டாட்சியர் உத்தரவின் பேரில் காவல் துறையினர் பாதுகாப்புடன் அகற்றினர்.
கீழ்வேளூர் கச்சனம் சாலையில் வசித்து வருபவர் ரத்தினவேல் (70). இவரின் மகன் ஆனந்த், தனது தந்தைக்கு சொந்தமான கச்சனம் சாலையில் உள்ள இடத்தில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் வயதான தன்னைப் பார்த்துக் கொள்ளுமாறு தனது மகன் ஆனந்திடம் ரத்தினவேல் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு ஆனந்த் மறுப்பு தெரிவிக்கவே, பெட்ரோல் பங்க் உள்ள இடத்தை மகன் ஆனந்திற்கு ’தான செட்டில்மண்ட்’ கொடுத்ததை ரத்து செய்திட வேண்டும் என்று கடந்த ஆண்டு நாகப்பட்டினம் கோட்டாட்சியர் பழனிகுமாரிடம் தந்தை ரத்தினவேல் மனு அளித்தார்.
பெட்ரோல் பங்க்கிற்கு வேலி போட்ட தந்தை இதையடுத்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 16ஆம் தேதி பெற்றோர் முதியோர் பராமரிப்பு நல்வாழ்வு சட்ட விதிகள் 2007இன் படி, ரத்தினவேல் தனது மகன் ஆனந்திற்கு பெட்ரோல் பங்க் வைத்துக்கொள்ள கொடுத்த இடத்தின் ’தான செட்டில்மெண்டை’ கோட்டாட்சியர் பழனிகுமார் ரத்து செய்து உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து பெட்ரோல் பங்க் வாசலில் ரத்தினவேல் வேலி அடைத்து நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
நாகப்பட்டினத்திற்கு புதிதாக வந்த கோட்டாட்சியர், அத்தியாவசியப் பொருள்கள் விதிகளின்படி பெட்ரோல் பங்க் இயங்குவதற்கு அனுமதி அளித்தார். இந்நிலையில், இன்று (ஜூன்.11) வட்டாட்சியர் தலைமையில் குவிந்த நூற்றுகணக்கான காவல் துறையினர் வேலியைப் பிரிக்க முயன்றனர். இதனால் ஆத்திரமடைந்த ரத்தினவேல் மற்றும் அவரது குடும்பத்தினர், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் பேச்சு வார்த்தை நடத்தி வேலியைப் பிரித்த காவல் துறையினர், இரு தரப்பினரையும் நாளை (ஜூன்.12) கோட்டாட்சியர் அலுவலகம் வருமாறு உத்தரவிட்டதுடன், பிரச்னை முடியும்வரை பெட்ரோல் பங்க்கில் வியாபாரம் செய்யக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: 30ஆண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளன் : இருள் நீங்கி வெளிச்சம் பிறக்கட்டும் - ராம்தாஸ்