தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

7 வயது மகளிடம் தவறாக நடந்த தந்தை போக்சோவில் கைது! - mayiladuthurai district news

ஏழு வயது மகளிடம் தகாத முறையில் நடந்துகொண்ட தந்தையை மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவலர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

father-arrested-for-abusing-7-year-old-daughter-in-mayiladuthurai
7 வயது மகளிடம் தவறாக நடந்துகொண்ட தந்தை போக்சோவில் கைது

By

Published : Feb 3, 2021, 10:07 PM IST

மயிலாடுதுறை:மயிலாடுதுறையைச் சேர்ந்த சுகுமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சமையல் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். மகன் சுகுமாரின் தாய் வீட்டில் வசித்துவரும் நிலையில், சுகுமார், அவரது மனைவி, 7ஆம் வகுப்பு படிக்கும் அவரது மகள் ஆகியோர் மயிலாடுதுறையில் வசித்துவந்துள்ளனர்.

இந்நிலையில், சிறுமி கடந்த சில தினங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து சிறுமியிடம் தாய் விசாரித்ததில், சுகுமார் கடந்த இருமாதங்களாக தகாத முறையில் நடந்துகொண்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, சுகுமார் மீது அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து அவரை சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:பரமத்தியில் கூலித் தொழிலாளி போக்சோவில் கைது!

ABOUT THE AUTHOR

...view details