மயிலாடுதுறை:தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட செம்பனார்கோவில், திருக்கடையூர், ஆக்கூர், திருவிடைக்கழி, பரசலூர், கிடாரங்கொண்டான், கீழையூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடப்பாண்டு விவசாயிகள் 50 ஆயிரம் ஏக்கருக்கு மேல் சம்பா, தாளடி நெற்பயிர்கள் நடவு செய்துள்ளனர்.
பயிர்கள் நடவு செய்தபோது பருவம் தவறி பெய்த மழை, அதன்பின்னர் பெய்த வடகிழக்கு பருவமழை ஆகியவற்றால் 20 ஆயிரம் ஏக்கருக்குமேல் சம்பா, தாளடி பயிர்கள் இரண்டு முறை பாதிக்கப்பட்டது.
நெற்பயிர்கள் சேதம் பன்றிகளால் விவசாயிகள் கவலை அதன் பிறகு, மழையால் பாதித்த பயிர்களுக்கு உரமிட்டுக் காப்பாற்றி பயிர்கள் கதிர் வந்து அறுவடைக்குத் தயார் நிலையில் இருந்தது.
நெற்பயிர்கள் சேதம் பன்றிகளால் விவசாயிகள் கவலை தற்போது, வெப்பச்சலனம் காரணமாகக் கடந்த இரண்டு நாள்களாக தரங்கம்பாடி தாலுகா பகுதியில் மீண்டும் பெய்த கனமழையால் அறுவடை செய்ய வேண்டிய நெற்பயிர்கள் பல்வேறு இடங்களில் வயலில் சாய்ந்துள்ளது.
நெற்பயிர்கள் சேதம் பன்றிகளால் விவசாயிகள் கவலை இந்நிலையில், திருக்கடையூர் சுற்றுவட்டாரப் பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட பன்றிகள் வயலில் இறங்கி சம்பா பயிர்களை உண்டும், பயிர்களை வயலில் சாய்த்தும் சேதப்படுத்தி வருகிறது. மேலும், வயலிலேயே குட்டிகளை ஈன்றெடுத்து நாசம் செய்து வருவதாக விவசாயிகள் வருத்தத்தில் உள்ளனர்.
நெற்பயிர்கள் சேதம் பன்றிகளால் விவசாயிகள் கவலை வயலில் ஈன்ற குட்டிகளைப் பிடித்து விவசாயிகள் அப்புறப்படுத்தினர். மேலும், திருக்கடையூர் பகுதியில் சுகாதார சீர்கேட்டையும், விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பன்றிகளைப் பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: மோடி ஆட்சியில் ரூ.5.35 லட்சம் கோடி மோசடி - ராகுல் குற்றச்சாட்டு