தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நூதன முறையில் ஆட்சியரிடம் மனு அளித்த விவசாயிகள்! - நூதன முறையில் ஆட்சியரிடம் மனு அளித்த விவசாயிகள்

நாகப்பட்டினம்: காய்கறி சந்தைக்கும் நிலம் ஒதுக்கக் கோரி காய்கறி மாலையுடன் நூதன முறையில் மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.

protest
protest

By

Published : Nov 9, 2020, 1:07 PM IST

நாகப்படடினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே அமைந்துள்ளது பழமை வாய்ந்த பறவை காய்கறி சந்தை. இங்கு மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து விவசாயிகள் தாங்கள் விளைவித்த பல்வேறு காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.

பல ஆண்டு காலமாக செயல்பட்டு வந்த பறவை காய்கறி சந்தைகள் நடத்தும் இடம் சிலரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் விளைவித்த பொருள்களை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. கரோனா நெருக்கடி காலத்தில் மாவட்ட நிர்வாகம் வேளாங்கண்ணி பேராலயத்தில் சொந்தமான இடத்தில் தற்காலிக காய்கறி சந்தையை ஏற்படுத்தி தந்தது.

தற்போது பெய்து வரும் மழையால் தற்காலிக சந்தை அமைந்திருக்கும் இடம் முழுவதும் மழைநீர் தேங்கி காணப்படுகிறது. இதனால், சந்தை நடத்த விவசாயிகள் சிரமத்துக்குள்ளாகினர். எனவே, அரசுக்கு சொந்தமான இடத்தில் 5 ஏக்கர் பரப்பளவில் நிலம் ஒதுக்கி காய்கறி சந்தை அமைத்து தர வேண்டி 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் நாகை ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

வேளாங்கண்ணி, பறவை, விழுந்தமாவடி உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது கழுத்தில் காய்கறிகளால் ஆன மாலையை அணிவித்து நூதன முறையில் மனு அளித்தனர்.

இதையும் படிங்க:பிணங்களை தோண்டி மணல் கொள்ளை.. பாலாறு பள்ளமாகும் சோகம்..

ABOUT THE AUTHOR

...view details