நாகை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, செம்பனார்கோவில் அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை அன்று பருத்தி ஏலம் நடைபெறும். இந்த வாரத்திற்கான ஏலம் நாளை நடைபெற உள்ள நிலையில், சுமார் 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த பருத்தி மூட்டைகளை இன்றே ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு எடுத்து வந்து விற்பனை செய்ய காத்திருந்த வண்ணம் உள்ளனர்.
ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 1000 குவிண்டால்வரை மட்டுமே வைக்க இட வசதி உள்ள நிலையில், மேலும் 1000 குவிண்டால் பருத்தி விற்பனைக் கூடத்திற்கு வெளியே வாகனங்களில் வைக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதில், நாகை, திருவாரூர், விழுப்புரம், தஞ்சாவூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் உள்ள தனியார் வியாபாரிகள் மறைமுக ஏலத்தில் கலந்துகொண்டு, பருத்தியின் தரம், ஈரப்பதம் ஆகியவற்றுக்கு ஏற்றவாறு விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்கின்றனர்.