மயிலாடுதுறைமாவட்டத்தில் நடப்பாண்டு 96 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட குறுவை சாகுபடியைத் தாக்கும் குருத்துப்பூச்சி, இலை சுருட்டுப் பூச்சிகளை அழித்து பயிர்களை பாதுகாக்கும் விதமாக பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் பணியில் இன்று (ஜூலை17) விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி, சீர்காழி ஆகிய வட்டங்களில் விவசாயிகள் பம்புசெட் மற்றும் ஆற்று நீர் பாசனத்தைக்கொண்டும் குறுவை சாகுபடி பணியில் மும்முரம் காட்டி வருகின்றனர். நடவுப்பணிகள் முடிவடைந்து நாற்றுகள் இளம் பயிர்களாக கதிர் பிடிக்கும் நிலையில் உள்ள பயிர்களில் தற்போது குருத்துப்பூச்சி, இலை சுருட்டுப்பூச்சி, நாற்றங்கால் பூச்சி, பச்சை பூச்சித்தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இந்த பூச்சிகள் இலைகளை சுரண்டி சாற்றை உறிஞ்சுகிறது.