தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2020-21ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் நிதியமைச்சரும் துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். இதில் விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள பட்ஜெட்டில் உணவு பூங்கா அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
இந்நிலையில் இந்த அறிவிப்பிற்கு கடைமடை விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதேபோல் காவிரி டெல்டா மாவட்டங்களை சிறப்பு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என்ற பட்ஜெட் உரைக்கு வரவேற்பு தெரிவித்திருக்கும் டெல்டா விவசாயிகள், இந்த அறிவிப்பை சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் உடனடியாக தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.