தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 21, 2020, 1:29 PM IST

ETV Bharat / state

11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேரணி - இயக்குநர் கௌதமன் பங்கேற்பு!

நாகை: மயிலாடுதுறையில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெற்கதிர், கரும்பு மற்றும் ஏர் கலப்பை பூட்டிய மாடுகளுடன் விவசாயிகள் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேரணி
11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேரணி

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் டெல்டா பாசனதாரர் முன்னேற்ற சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும, மயிலாடுதுறையில் புதிய மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், 60 வயது நிறைந்த விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும், மேட்டூர் அணை உபரிநீர் என்று கூறி சேலம் மாவட்டத்திற்கு கொண்டு செல்லும் திட்டத்தை கைவிடவேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாயிகள் கையில் கரும்பு, நெற்பயிர் மற்றும் ஏர் கலப்பை பூட்டிய மாடுகளுடன் நூதன முறையில் கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் பேரணியாக சென்றனர்.

மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் அருகே தொடங்கிய இந்தப் பேரணி, முக்கிய வீதி வழியாக சென்று சின்னக்கடை வீதியில் முடிவடைந்தது. அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டெல்டா பாசனதாரர் முன்னேற்ற சங்கத் தலைவர் குரு கோபி கணேசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், திரைப்பட இயக்குநர் கௌதமன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். இதில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேரணி

ABOUT THE AUTHOR

...view details