தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அழுகிய நாற்றுடன் விவசாயிகள் போராட்டம் - விவசாயிகள் வயலில் இறங்கி போராட்டம்

மயிலாடுதுறை: வில்லியநல்லூரில் விவசாய பாதிப்புகளை வேளாண் அலுவலர்கள் பார்வையிடாததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் வயலில் இறங்கி அழுகிய நாற்றுக்களை கையில் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Farmers protest with rotten seedlings in mayiladuthurai
Farmers protest with rotten seedlings in mayiladuthurai

By

Published : Jan 19, 2021, 10:41 AM IST

மயிலாடுதுறை மாவட்டம் வில்லியநல்லூர் கிராமத்தில் சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பில் சம்பா பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அண்மையில் பெய்த கனமழை காரணமாக சுமார் 150 ஏக்கருக்கும் மேலான நிலப்பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா பயிர்கள் வயலில் சாய்ந்து முற்றிலும் நாசமாயின.

அழுகிய நாற்றுடன் விவசாயிகள் போராட்டம்

இது குறித்து ஆய்வு செய்ய வில்லியநல்லூர் கிராமத்தில் வேளாண் துறை அலுவலர்கள் யாரும் வரவில்லை என்று குற்றஞ்சாட்டிய விவசாயிகள், வயலில் இறங்கி அழுகிய நாற்றுக்களை கையில் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, வேளாண்துறை அலுவலர்கள் பயிர் சேதத்தை பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், இன்சூரன்ஸ் தொகையை 100 விழுக்காடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:மாற்றுத்திறனாளி மாணவி கரகம் ஆடியபடி நாற்று நட்டு விழிப்புணர்வு

ABOUT THE AUTHOR

...view details