நாகப்பட்டினம்: கனமழையால் சேதம் அடைந்த வயலில் இறங்கி கறுப்பு கொடிகளுடன் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது, “பயிர் பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்காத தமிழ்நாடு அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
நாகை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக 85 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சாய்ந்து சேதமாகி உள்ளன. இந்த நிலையில் பயிர் பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம் வழங்காத தமிழ்நாடு அரசை கண்டித்து நாகை மாவட்டத்தில் விவசாயிகளின் போராட்டம் வலுத்து வருகிறது.
வயலில் இறங்கி கறுப்பு கொடிகளுடன் விவசாயிகள் போராட்டம்! - Nagai latest news
நாகை விவசாயிகள் வயலில் இறங்கி கறுப்பு கொடிகளுடன் போராட்டம் நடத்தினார்கள்.
அதன் ஒருபகுதியாக நாகை அடுத்த வடகுடி கிராமத்தில் 1500க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டு மழையில் சேதமான நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்காத மாநில அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மழையால் நாசமான வயலில் இறங்கி கறுப்புக்கொடிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் பயிர் பாதிப்புகளுக்கு முழுமையான நிவாரணம் வழங்க வலியுறுத்தியும், பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து, பயிர் பாதிப்புகளை இதுவரை கணக்கெடுப்பு நடத்தாத அரசு அலுவலர்களை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க: மன்னார்குடியில் கனமழை காரணமாக நெல் பயிர்கள் சேதம்!